சாரதி அனுமதிப் பத்திரத்தில் உள்ள புள்ளிகளை அறிந்துகொள்ள...

Patente a punti: il saldo.


 

        உங்கள் சாரதி அனுமதிப் பத்திரத்தில் இன்னும் எவ்வளவு புள்ளிகள் உள்ளன என்பதை அறிய வேண்டுமா? நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். ஒரே ஒரு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டாலே போதும். 
848 782 782  இந்த தொலைபேசி இலக்கத்துக்கு வீட்டுத் தொலைபேசியிலிருந்து (telefono di rete fisso) அழைக்க வேண்டும். தொலைபேசி அழைப்புக் கட்டணமாக சாதாரன உள்ளூர் அழைப்புக்குரிய (costo di una telefonata urbana ) கட்டணமே அறவிடப்படும்.

தொடர்பு கிடைத்ததும் பதிவு செய்யப்பட்ட தகவல் உங்களுக்கு பதிலளிக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியது:

1. உங்களது பிறந்த திகதியை தொலைபேசியில் அழுத்த வேண்டும். ( data di nascita )
    திகதிக்கு 2 இலக்கங்களும், மாதத்துக்கு 2 இலக்கங்களும், ஆண்டுக்கு 4 இலக்கங்களும் அழுத்த வேண்டும்.
    உதாரணம்: 01-02-1970.

2. உங்களது சாரதி அனுமதிப் பத்திரத்தின் இலக்கத்தினை அழுத்த வேண்டும். ( numero della patente (senza lettere) )
    (எழுத்துக்கள் இல்லாது தனி இலக்கங்கள் மட்டும்.)
    உதாரணம்: MI 12345 C   என்று இருந்தால் 12345# என்று அழுத்த வேண்டும்.

 

சற்று நேரத்தில் இவ்வாறு ஒரு பதில் கிடைக்கும்:

Alla data odierna il punteggio assegnato alla patente n. xxxxxx pari a xx punti!

அதாவது, உங்களுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தின் இலக்கத்தினை முழுமையாகக் கூறி, எத்தனை புள்ளிகள் உள்ளன என்பதும் தெரிவிக்கப்படும். 

இச்சேவையினை வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் பெறலாம்.

 

        01-07-2005 முதல் கடந்த 2 ஆண்டுகளில் புள்ளிகள் கழிக்கப்படாதவர்களுக்கு மேலும் 2 புள்ளிகள் மேலதிகமாக (bonus di 2 punti) வழங்கப்பட்டுள்ளன. ஆகவே தற்போது (2011)  மொத்தப் புள்ளிகளின் எண்ணிக்கை 28 ஆக இருக்கும்.