நாணய மாற்று
தொலைத் தொடர்பு
  
உள்ளூர் தொலைபேசி
குறியீட்டென்
நாட்காட்டி
அறிவித்தல்கள்

முகப்பு கவிதைகள் ஒரு பௌர்ணமிப் பொழுது...

ஒரு பௌர்ணமிப் பொழுது...

அது ஒரு
அந்திசாயும் நேரம்
அவள் அழகை,  இயற்கை
உடுத்தும் போலும்!

மெல்லிய சாம்பல்நிற
உடை அணிந்து!
மெது மெதுவாகத்தன்
தேகங்களின் 
பாகங்கள் எல்லாம்
காட்டும் ஜாலம்!பெரிசுகள் முதல்
சிறுசுகள் வரை
சில்மிசங்களில்...
நிமிடங்கள், மணித்துளிகள்
கடந்து...கடந்து போக,

அவள் அழகின்
அற்புதத் தீவு!
அணிந்திருந்த ஆடையைக்
களைந்தெறிந்து
காற்றில் விட...

மூச்சிரைத்து மூச்சிரைத்து
முதலுதவி கேட்டு
காற்று நிற்க...

மெல்லிய புன்னகை
மின்னல் போல
வந்து போக,

காற்று உயிர் பெற்ற
மகிழ்வை விட...
அவள் தொட்ட
மகிழ்வில்...
தென்றலாகி
தேடி வர,

உள்ளத்து உலை
மெல்ல மெல்ல...
உயர்விசை கொண்டு
கொதிக்க,

எண்ணமெல்லாம்...
அவள் நினைவாக,
ஏங்கி ஏங்கி
மனந் தவிக்க...

ஆடை களைந்தவள்
பொத்தென்று
கடலில் விழுந்தாள்!

அலையின் இடையே...
தலைகள் தாழ்த்தி, உயர்த்தி
அவள் நீந்தும்
அழகைக் கண்டபோது

அட,
கடலாக நான்
பிறந்திருக்கக் கூடாதா, என
மனந்துடிக்கிறது!


கவிஞர், அல்லையூர் சி.விஐயன் 

DiggDiigoFacebookFriendfeedGoogle BookmarksGoogle BuzzMySpaceNewsvineredditTwitter

 
அகல் விளக்கு

பிரிந்தும் எம் மனதை
விட்டு அகலாதவர்களுக்கு
அகல் விளக்கு.

விளம்பரங்கள்

வாழ்த்துக்கள்