நாணய மாற்று
தொலைத் தொடர்பு
  
உள்ளூர் தொலைபேசி
குறியீட்டென்
நாட்காட்டி
அறிவித்தல்கள்

முகப்பு கவிதைகள் தமிழே..!! தமிழே..!!

தமிழே..........!!  தமிழே..........!!


எம் தாய்த் தமிழே,
சிந்தனையும் செயல்வடிவமும் பெறும் தமிழே!
உனை செவிகள் வாங்கும் போது உள்ளம் மறந்து மனம் திளைத்து
ஆனந்தம் பொங்குதே நெஞ்சினிலே.

வார்த்தைகளாய் உரைத்திடும் போதும்
நாவினில் சுவையூட்டிடும் தமிழே.
தமிழே.......  தமிழே........
எம் நாதத் தமிழே.


உடலினில் நுழைந்தாய் 
உயிரினில் கலந்தாய்
உணர்வினில் வாழும் தமிழே.
தமிழே....... தமிழே.........
எம் இன்பத் தமிழே.

எம் தேசியத் தலைவரும் ஈழ்த்திலே
போற்றி நிற்கும் தமிழே,
தமிழே........தமிழே.........
எம் ஈழத் தமிழே.

இன்று ஈழ மண்ணில் 
முடி சூடிநிற்கும் எம் அண்ணன் சபையில்
அரங்கேறி நிற்கும் தமிழே,
தமிழே.........தமிழே.........
எம் ஆட்சித்தமிழே,  செந்தமிழே.

மூதாதையர்(களின்) வழி நின்று
உரையாடி மகிழ்கின்ற தமிழே,
நாளை தொடரும் எம் சந்ததியும்
பேசி மகிழும் தமிழே
எம் பரம்பரைத் தமிழே.

சேர, சோழ பாண்டியரும்
ஈழ மன்னன் இராவணனும்
ஆண்ட தமிழே,
தமிழே..........தமிழே.........

அதிகாரம் உரைத்த தமிழே.......
சிந்து நதி மீதினிலே
கவி வடித்த பாரதியும்
இராமாயணம் தந்த கம்பரும்

நல் பொருள் சொல்லும் வள்ளுவமும்
சொன்ன தமிழே, சங்கத்தமிழ் வடித்த
தமிழே........ தமிழே.........
எம் இலக்கியத் தமிழே.

பாட்டன் பண்டாரவன்னியன்
பறங்கியர்களுக்கு வீரம் உரைத்த தமிழே,
தமிழே..........தமிழே.........
எம் வீரத் தமிழே.

பண்டாவின் படைகளுக்கு
புலிப்படை தமிழ்ப்படை சொன்ன தமிழே,
தமிழே......... தமிழே.......
எம் உயிர்த் தமிழே.

க.சுபாஸ்DiggDiigoFacebookFriendfeedGoogle BookmarksGoogle BuzzMySpaceNewsvineredditTwitter

 
அகல் விளக்கு

பிரிந்தும் எம் மனதை
விட்டு அகலாதவர்களுக்கு
அகல் விளக்கு.

விளம்பரங்கள்

வாழ்த்துக்கள்