நாணய மாற்று
தொலைத் தொடர்பு
  
உள்ளூர் தொலைபேசி
குறியீட்டென்
நாட்காட்டி
அறிவித்தல்கள்

முகப்பு கவிதைகள் மண்ணின் மைந்தர்கள்மண்ணின் மைந்தர்கள்


கார்த்திகை மாதம் கார்மேகம் மட்டுமல்ல
எம் இதயங்களும் ஒரு கனம் கசிந்துருகும்
தேசத்தின் விடுதலையை உயிர் மூச்சாகக் கொண்டு
நம் தேசத்தை மீட்டெடுக்கப் புறப்பட்ட உன்னத புருஷர்கள்


----- ----- -----


தமிழீழ மண்ணிலே அடிமையாய்த் தவிக்கையிலே
தமிழர்கள் துயர் துடைக்க தரணியிலே உதித்தவரே!
தமிழீழத்தின் இடர்களைய குயவரியாய் ஆனவரே!
தலைவனின் வாக்கினைச் செவ்வனே உணர்ந்தவரே!

----- ----- -----

சிங்களப் படையினை சீற்றத்துடன் எதிர்த்தவரே!
செந்தனலாய் அனல் தெறிக்க எதிரியை அழித்தவரே!
வீரத்தின் விளைநிலத்தில் விளைந்த தமிழ் மறவனே!
வீரத்தாய் ஈன்றெடுத்த மறத்தமிழ் மைந்தனே!

----- ----- -----

தமிழீழத் தாயின் விலங்கினைத் தகர்ப்பதற்காய் துணிந்தவனே!
தன் மானத் தமிழனாய் தம் உயிரை மாய்த்தவனே!
தலைவனின் வேதத்தை சிரம் மீது சுமந்தவனே!
தலை முறையின் விடிவுக்காய் ஈழம் கானத் துணிந்தவனே!

----- ----- -----

பிஞ்சுக் கரங்களிலே ஆயுதத்தைச் சுமந்தவரே!
நஞ்சு மாலையினை நயத்துடன் அணிந்தவரே!
விஞ்சிய தமிழ்த் தாகத்தால் ஊர், உறவைத்துறந்தவரே!
வெஞ்சுடராய் என்றும் அவணியில் மிளிர்பவனே!

----- ----- -----

மண்ணினை மீட்பதற்காய் மரணத்தை ஏற்றவனே!
மாவீரனாய் உயிரை மண்ணிலே விதைத்தவனே!
விதை குழியில் வித்தாய்த் துளிர்கின்ற மாவீரனே!
விண்ணிலே மீனாக என்றுமே ஒளிர்பவனே!

----- ----- -----

தன்னலம் இன்றிப் போரிட்ட பெரும் புயலே!
தாய் மண்ணின் விடுதலைக்காய் வேங்கையாய் எழுந்தவனே!
தாயக விடிவுக்காய் தன்னலம் மறந்தவனே!
தாகம் அது ஈழம் என மண்ணில் சரண் புகுந்தவரே!

----- ----- -----

வீறு கொண்டு வேங்கையாய் படை எதிர்த்த மறவனே!
வெஞ்சிளம் பொங்கவே போரிட்ட செந்தமிழனே!
வேட்கையது தமிழ் எனவே வெஞ்சிளம் கொண்டவரே!
வரலாற்றில் சாசனமாய் என்றுமே திகழ்பவரே!

----- ----- -----

அனையாத தீபமாய் என்றுமே ஒளிர்பவரே!
அன்னையின் இருள்களைய ஒளி விளக்காய் ஒளிர்பவரே!
மழையும், இடியும், புயலும், கடலும், கானகமும் இவர்களுக்குத்தோழர்கள்!
இவர்களின் இலட்சியப் பயணத்தில் அவை கைகோர்த்தே சென்றனவே!

----- ----- -----

இனவிடுதலை ஒன்றே அவர்களின் கனவாயிற்று-அவர்களின்
கனவை நனவாக்கத் தலைவனும் ஆயிரம் ஆயிரம் போராளிகளும்
இலட்சோ இலட்சதமிழ்மக்களும் அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிறனர்
எங்கள் மண்ணின்மைந்தர் மாவீரர்நாமம் போற்றி,சிரம்தாழ்த்தி விடைபெறும்

கி.குமரேசன்

DiggDiigoFacebookFriendfeedGoogle BookmarksGoogle BuzzMySpaceNewsvineredditTwitter

 
அகல் விளக்கு

பிரிந்தும் எம் மனதை
விட்டு அகலாதவர்களுக்கு
அகல் விளக்கு.

விளம்பரங்கள்

வாழ்த்துக்கள்